Showing posts with label மூத்த பத்திரிகையாளர். Show all posts
Showing posts with label மூத்த பத்திரிகையாளர். Show all posts

Tuesday, October 13, 2015

மூத்த பத்திரிகையாளர் கஜேந்திர பாஸ்கரா படத்திறப்பு, நினைவேந்தல்



மூத்த பத்திரிகையாளர் படத்திறப்பு, நினைவேந்தல்
                                   செய்தி குறிப்பு
                                                                                                                                            
     புதுச்சேரி தலித் சமுதாய மூத்த தலைவரும், மூத்த பத்திரிகையாளருமான ‘ ஏப்ரல் ‘ , ‘ தலைமகன் ‘ மாத இதழ்களின் ஆசிரியர் மறைந்த கஜேந்திர பாஸ்கரா மறைவையொட்டி அவருடைய உருவப்பட திறப்பு விழாவும், நினைவேந்தல் நிகழ்வும் நேற்று (10-10-2015) மாலை 5மணிக்கு புதுச்சேரி தமிழ் சங்க அரங்கில் நடைபெற்றது.
     கூட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ மூத்த பத்திரிகையாளர் மா.இளங்கோ தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் தலித் சமுதாய மூத்த தலைவர் நீல. கங்காதரன், முன்னாள் அமைச்சர்கள் எம். கந்தசாமி, ஆர். விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ, வி. பாலாஜி, இரா. அழகிரி, முன்னாள் வணிக வரி ஆணையர் ராமதாஸ், டாக்டர். ஜெனார்தனன், டாக்டர். சங்கரன், தமிழ்மாமணி. நந்திவர்மன், பத்திரிகையாளர். மதுரகவி, அ.இருசப்பன், கலைமாமணி. மா. இராமஜெயம், குணசேகரன், தேவி. திருவளவன், தலித்சேனா தேசிய பொதுச் செயலாளர் திருஞானம், லோக் ஜனசக்தி தலைவர் புரட்சி வேந்தன், ஆடிட்டர. ரகோத்தமன், பத்திரிகையாளர் தணிகைதம்பி, ஓய்வு பெற்ற பேட்கோ மேலாண் இயக்குனர் அன்பழகன், பத்திரிகையாளர் ஆர். பழனிசாமி, அம்பேத்கர் மக்கள் மன்ற தலைவர் மடுகரை சுப்புரமணியன், ஏப்ரல் ஆசிரியர் லட்சுமி சரவணன், உள்பட பலத் தலைவர்கள் மலர் அஞ்சலி செலுத்தி நினைவுரை நிகழ்த்தினார்கள்.
         அம்பேத்கார் மக்கள் சங்க தலைவர் சுந்தரராசு நன்றி கூறினார்.
      டாக்டர். ஜனார்தனன், முன்னாள் வணிகவரி ஆணையர் ராமதாஸ் ஆகியோர் கஜேந்திர பாஸ்கரா உருவபடத்தை திறந்து வைத்தனர்.
      அரசியல் தலைவர்கள், தலித் சமூகத்தினர், பத்திரிகையாளர்கள், தமிழறிஞர்கள், தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், நண்பர்கள், உறவினர்கள் உள்பட ஏராளமானோர் மலரஞ்சலி செலுத்தினார்கள்.

                                                      மா.இளங்கோ Ex.MLA,
                                                                          புதுச்சேரி.